பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது நல்லது; அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் மெல்ல அதிகரித்து வருகிறது;

Update:2025-06-06 20:12 IST

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் மெல்ல அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்து 364 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவரிடம் தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த மா.சுப்பிரமணியன் கூறுகையில்,

தமிழகத்தில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல. ஆனால், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது நல்லது. கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை. வீரியம் குறைவான கொரோனாதான் பரவுகிறது என்பது ஆய்வக சோதனையில் தெரியவந்துள்ளது' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்