அனைவரது மனதிலும் ஜெயலலிதாவின் நினைவு நிலைத்திருக்கும் - ரஜினிகாந்த்

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்நநாளையொட்டி நடிகர் ரஜினிகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.;

Update:2025-02-24 11:18 IST

சென்னை,

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்திற்குச் சென்ற நடிகர் ரஜினிகாந்த், ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி உடனிருந்தனர். முன்னதாக வேதா இல்லத்திற்கு வந்த நடிகர் ரஜினிகாந்தை ஜெ.தீபா சால்வை அணிவித்து வரவேற்றார்.

வேதா இல்லத்தில் ஜெயலலிதா உருவ படத்திற்கு மரியாதை செலுத்தியபின் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

இதற்கு முன்பு 3 முறை வேதா இல்லத்திற்கு வந்து ஜெயலலிதாவை சந்தித்துள்ளேன்.  4வது முறையாக வேதா இல்லத்திற்கு வருகிறேன். இனிப்பான.. சுவையான நினைவுகளோடு போறேன். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இல்லாவிட்டாலும் அவரது நினைவு மக்கள் மனதில் நிலைத்திருக்கும் என்றார். ஜெயலலிதா வசித்த வேதா நிலையத்தில் ஜெ.தீபா நடத்திய பிறந்தாள் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். 

Tags:    

மேலும் செய்திகள்