ஜெயலலிதா படம் அவமதிப்பு - கண்டனம் தெரிவித்த அதிமுக

2006-11 திமுக ஆட்சியில் இருண்டிருந்த தமிழ்நாட்டை, ஒளிரூட்டியவர் அம்மா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-06-29 12:36 IST

கோப்புப்படம்

சென்னை,

அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

மறைந்தும் மக்கள் உள்ளங்களில் வாழும் இதயதெய்வம் அம்மா அவர்களை அவமானப் படுத்திய ஸ்டாலின் அரசுக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும் கடும் கண்டனம்.

மின் பகிர்மான கோட்ட அலுவலகத்தில் உள்ள அம்மா அவர்களின் புகைப்படங்களை குப்பைத் தொட்டியில் வீசினால், அம்மா அவர்களின் சாதனைகளை மறைத்துவிட முடியுமா?

2006-11 திமுக ஆட்சியில் இருண்டிருந்த தமிழ்நாட்டை, ஒளிரூட்டியவர் அம்மா அவர்கள். மின்வெட்டு தமிழ்நாட்டை, மின்மிகை மாநிலமாக்கியவர்.

ஆட்சிக்கு வந்தது முதல் மின் கட்டண உயர்வை மட்டும் சரியாக செய்யும் இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசின் அவமானச் செயலுக்கு, தமிழ்நாட்டு மக்களுடன் இணைந்து கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழச்சாமி தலைமையிலான அஇஅதிமுக தக்க பதிலை 2026-ல் தரும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்