திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு 3,740 கோவில்களில் கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர்பாபு
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் மேம்படுத்தி வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்;
சென்னை,
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது,
திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றபின், இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் மேம்படுத்தி வழங்கப்பட்டு வருகிறது. ஓட்டேரி, செல்லப்பிள்ளைராயர் பெருமாள் கோவில், பெசன்ட் நகர் மகாலட்சுமி கோவில் உள்பட 14 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக இன்றுவரை 3 ஆயிரத்து 740 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. '
அதேபோல் பல ஆண்டு காலமாக ஓடாமல் இருந்த தங்கத்தேர், வெள்ளித்தேர் மற்றும் மரத்தேர்களை ஓட வைத்த பெருமை இந்த அரசுக்கு உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.