சிறுமியை தாக்கி இழுத்துச்சென்ற சிறுத்தை.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்

போலீசார் மற்றும் வனத்துறையினர் சிறுமியை தொடர்ந்து தேடி வருகின்றனர்.;

Update:2025-06-20 21:16 IST

கோவை,

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியானது தேயிலை தோட்டங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு தமிழகம், கேரளா மற்றும் வட மாநிலங்களான பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், வால்பாறை அருகே உள்ள பச்சைமலை எஸ்டேட்டில் வடமாநில பெண் தொழிலாளி ஒருவர், தனது வீட்டின் பின்புறம் தனது 6 வயது மகளுடன் தண்ணீர் பிடித்துக்கொண்டு இருந்தார். அப்போது, தண்ணீர் குடத்தை வீட்டிற்குள் வைத்துவிட்டு வருவதற்குள், வெளியே நின்றுகொண்டிருந்த சிறுமியை சிறுத்தை தாக்கி இழுத்துச்சென்றுள்ளது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் கத்தி கூச்சலிட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் வனத்துறையினரும் சிறுமியை தொடர்ந்து தேடி வருகின்றனர். சிறுமியின் நிலை என்ன ஆனது என்று இன்னும் தெரியவரவில்லை.வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்த சிறுமியை சிறுத்தை இழுத்துச்சென்ற சம்பவம் வால்பாறையில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்