தமிழ்நாட்டில் 12,110 ஊராட்சிகளில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
சட்டமன்ற உறுப்பினர் கேட்ட இரண்டு ஊராட்சிகளிலும் நூலகம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.;
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், சோழிங்கநல்லூர் தொகுதி புனித தோமையர் மலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நூலகம் அமைக்க அரசு முன் வருமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, "ஊரக பகுதிகளில் நூலகம் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்து உள்ளார். அந்த பணியை அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள 12,110 ஊராட்சிகளில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் கேட்ட இரண்டு ஊராட்சிகளிலும் நூலகம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.