இன்ஸ்டாகிராமில் பழகிய பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய லாரி டிரைவர்
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 22), லாரி டிரைவரான இவர் 13 வயதுடைய பள்ளி மாணவியிடம் இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளார். தொடர்ந்து மாணவியிடம் காதலிப்பதாக நைசாக பேசி விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவியை பெற்றோர் பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து, மாணவி கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்தனர். தொடர்ந்து மாணவியை திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் செய்யாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியமூர்த்தியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.