மதுரை-குருவாயூர் ரெயில் பகுதியாக ரத்து

பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;

Update:2025-10-11 04:40 IST

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் சிங்கவனம் அருகே நடைபெறும் ரெயில் பாலம் பராமரிப்பு பணியை தொடர்ந்து மாற்று பாதையில் இயக்கப்படும் 2 ரெயில்களுக்கு காயங்குளம் ரெயில் நிலையத்தில் தற்காலிக நிறுத்தம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருவனந்தபுரம் கோட்ட தெற்கு ரெயில்வே வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இன்று (சனிக்கிழமை) மாலை 5.25 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி-திப்ரூகார் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22503) மற்றும் மாலை 6.05 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் வடக்கு-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு ஹம் சாபர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 16319) ஆகிய 2 ரெயில்கள் ஆலப்புழை வழியாக இயக்கப்படும். இதனால் இந்த ரெயில்களுக்கு, காயங்குளம், ஆலப்புழை, எர்ணாகுளம் சந்திப்பு நிலையங்களில் நிறுத்தம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொல்லம்-எர்ணாகுளம் சந்திப்பு மெமு ரெயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மதுரை சந்திப்பு-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில், கொல்லம் - குருவாயூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

குருவாயூர்-மதுரை சந்திப்பு ரெயில் நாளை குருவாயூர்-கொல்லம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. கோட்டயம்-நிலம்பூர் ரோடு எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று கோட்டயம்-ஏற்று மானூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்