பராமரிப்பு பணி: திருச்சி-காரைக்கால் ரெயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;

Update:2025-05-26 12:15 IST

திருச்சி,

திருச்சி ரெயில்வே கோட்டத்தின் திருவாரூர் மற்றும் கீழலூர் பிரிவுக்கு இடையே பொறியியல் பணிகள் நடைபெறுவதால் அந்த வழியாக இயங்கும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (திங்கட்கிழமை), வருகிற 28, 29, 30, 31, மற்றும் அடுத்த மாதம் 1-ந்தேதிகளில் திருச்சியில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்படும் திருச்சி - காரைக்கால் டெமு ரெயில் (வண்டி எண் 76820) திருவாரூர் வரை மட்டுமே இயங்கும்.

இதேபோல் இன்று (திங்கட்கிழமை), 28, 29, 30, 31-ந் தேதி, அடுத்த மாதம் 1-ந்தேதி ஆகிய நாட்களில் காரைக்காலில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்படும் காரைக்கால் - திருச்சி டெமு ரெயில் (வண்டி எண் 76819) காரைக்கால் - திருவாரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு வந்தடையும். இந்த தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்