பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை
சென்னையில் நாளை மறுநாள் ஐயப்பந்தாங்கல், அடையாறு, பெசன்ட்நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னையில் நாளை மறுநாள் (4.7.2025, வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
ஐயப்பந்தாங்கல்: மேட்டு தெரு, இவிபி பார்க், தனலட்சுமி நகர் ,சுப்பையா நகர், பாலாஜி அவென்யு, பத்மாவதி நகர், சுப்பிரமணி நகர், விஜிஎன் நகர், கருமாரி அம்மன் நகர்.
அடையாறு: காந்தி நகர் 4வது பிரதான சாலை மற்றும் குறுக்குத் தெரு, 2, 3வது கால்வாய் குறுக்குத் தெரு.
கொட்டிவாக்கம்: புதிய கடற்கரை சாலை மற்றும் விரிவாக்கம், சிட்ரஸ் ஹோட்டல், திருவள்ளுவர் நகர் 2வது, 7வது பிரதான சாலை, 36, 58, 59 குறுக்குத் தெரு, குருஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் தாமரை வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள், பேவாட்ச் பவுல்வர்டு, வாட்டர் லேன்ட் டிரவ்.
பெசன்ட்நகர்: 2 மற்றும் 3வது மெயின் சாலை வரை, 16 முதல் 25வது குறுக்குத் தெரு, சிபிடபிள்யூடி குடியிருப்புகள் (புதியது), 6வது அவென்யூ, ஓடைக்குப்பம் பகுதி, திடீர் நகர் 7வது அவென்யூ.
சோழிங்கநல்லூர்: பெரும்பாக்கம் டிஎன்யுஎச்டிவி குடியிருப்புகள், பழைய தொகுதி ஏ முதல் ஏகே வரை, லைட் ஹவுஸ் குடியிருப்புகள்.
பல்லாவரம்: பாலமுருகன் நகர், அம்பாள் நகர், தேன்மொழி நகர், பூபதி நகர், சௌந்தரராஜன் நகர், குமரன் நகர், திருவள்ளுவர் நகர், கீழ்கட்டளை பேருந்து நிலையம், இங்கிலிஷ் எலக்ட்ரிக் நகர், 200 அடி ரேடியல் சாலை, ரோஸ் நகர், எம்.கே.நகர், கணபதி நகர், ஈச்சங்காடு சிக்னல் ஆகிய இடங்களில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.