திருநெல்வேலியில் முதியவரை கட்டையால் தாக்கியவர் கைது

வீரவநல்லூர் சுடலைமுத்து மகன் பாபநாசபெருமாள், சொள்ளமுத்துவை அவதூறாக பேசி கையாலும், கட்டையாலும் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளார்.;

Update:2025-05-17 14:04 IST

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர், வெள்ளாங்குழி, தெற்கு தெருவை சேர்ந்த சொள்ளமுத்து (வயது 80) மனைவி 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், மேற்சொன்ன முகவரியில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் சொள்ளமுத்து, அவரது உடன்பிறந்த சகோதரர் நடராஜன் மகன் முருகன் பராமரிப்பில் இருந்து வருகிறார். எனவே சொள்ளமுத்துவிற்கு சொந்தமான வீட்டை முருகனுக்கு எழுதி கொடுத்துள்ளார். இதனை மனதில் வைத்து கொண்டு அவரின் உடன்பிறந்த இரண்டாவது சகோதரர் சுடலைமுத்து மகனான பாபநாசபெருமாள்(44) நேற்று முன்தினம் (15.5.2025) சொள்ளமுத்து வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்து அவரை அவதூறாக பேசி கையாலும், கட்டையாலும் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இதுகுறித்து சொள்ளமுத்து வீரவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் லியோ ரேனிஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பாபநாசபெருமாளை நேற்று (16.5.2025) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்