திருநெல்வேலியில் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டு பெண் என்றும் பாராமல் அசிங்கமாக பேசி அவருக்கு மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.;

Update:2025-08-08 07:51 IST

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர், ஸ்ரீபத்மநல்லூர், தெற்கு தெருவை சேர்ந்த சரஸ்வதி (வயது 48) என்பவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த குமார்(52) என்பவர் சரஸ்வதியிடம் தகராறில் ஈடுபட்டு பெண் என்றும் பாராமல் அசிங்கமாக பேசி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.

இதுகுறித்து சரஸ்வதி வீரவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு குமாரை நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்