தொழில் போட்டி காரணமாக பழைய இரும்பு கடைக்கு தீ வைத்த நபர்: சிறையில் அடைப்பு

தொழில் போட்டி காரணமாக பழைய இரும்பு கடைக்கு தீ வைத்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;

Update:2025-04-24 14:32 IST

கோப்புப்படம் 

திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 25-கார்னர் பகுதியில் பழைய இரும்பு கடை வைத்திருப்பவர் சுகுமார்(40 வயது). இவரிடம் ராஜபெருமாள்(40 வயது) என்பவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வேலை செய்துள்ளார். பின்பு ராஜபெருமாள் தனியாக இரும்பு குடோன் வைத்து வியாபாரம் செய்ய தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் சுகுமாரின் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் ராஜபெருமாள் கடைக்கு சென்றுள்ளனர். இதனால் சுகுமாருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த சுகுமார் தனது நண்பர் பொன்சேகர் என்பவருடன் சேர்ந்து ராஜபெருமாளின் குடோனுக்கு தீ வைத்து எரித்து சேதப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக ராஜபெருமாள் கொடுத்த புகாரின் பேரில் பொன்சேகர் மற்றும் சுகுமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சுகுமாரை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் பொன்சேகர் தலைமறைவானார். இந்த நிலையில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த பொன்சேகரின் இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்து அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்