மணிப்பூர் சம்பவம் வேறு, கரூர் சம்பவம் வேறு: குஷ்பு பேட்டி

மணிப்பூர் சம்பவத்துக்கு நானே தலைகுனிகின்றேன் என்று குஷ்பு கூறினார்.;

Update:2025-10-04 16:19 IST

சென்னை,

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் குறித்து பலதரப்பு விசாரணைகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் கரூர் சம்பவம் குறித்து பாஜக துணைத் தலைவர் குஷ்பு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

“மணிப்பூர் கலவரம் முடிந்துபோன விஷயம், அதையும் கரூர் சம்பவத்தையும் ஒப்பிட்டு பேச முடியாது. நம்ம பக்கத்து வீட்டில் இதுபோன்ற சம்பவம் நடந்தாலே நம் மனது பதறிப் போகும். மணிப்பூர் சம்பவம் வேறு, கரூர் சம்பவம் வேறு. மணிப்பூர் சம்பவத்துக்கு நானே தலைகுனிகின்றேன். ஆனால் அதை கரூரோடு ஒப்பிடுவது சரியல்ல. விஜய் விஷயத்தில் ஏன் என நிறைய கேள்விகள் உள்ளன. ஆனால் ஏன் கேள்வி கேட்டாலே, முதல்-அமைச்சர் Mute Mode-க்கு போய்விடுகிறார்” என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்