நவம்பர் 7-ந்தேதி ம.தி.மு.க. நிர்வாக குழுக் கூட்டம் - வைகோ அறிவிப்பு
ஆடிட்டர் ஆ.அர்ஜூன்ராஜ் தலைமையில் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
ம.தி.மு.க. நிர்வாக குழுக் கூட்டம் வரும் நவம்பர் மாதம் 7-ந்தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூன்ராஜ் தலைமையில் வருகின்ற 07.11.2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெறும்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.