மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு

நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை இந்தாண்டில் 6 முறை நிரம்பியது.;

Update:2025-09-07 10:35 IST

சேலம்,

கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை இந்தாண்டில் 6 முறை நிரம்பியது.

மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 30 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 23 ஆயிரத்து 300 கனஅடியாக குறைந்தது.

இதே போல் காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்