மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது;
கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 58 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 57 ஆயிரத்து 732 கன அடியில் இருந்து 58 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து 58 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில் காவிரி டெல்டா பாசனத்திற்காக 26 ஆயிரம் கன அடியும், 16 கண் மதகுகள் வழியாக 32 ஆயிரம் கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் நீர் இருப்பு 93.470 டி.எம்.சி.யாக உள்ளது.