நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் "நலம் காக்கும் ஸ்டாலின்" சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.;
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" சிறப்பு மருத்துவ முகாமில், மருத்துவ பரிசோதனைக்காக வந்த பயனாளிகள் பதிவு செய்யும் அரங்கத்தினை மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த முகாமில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத், ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையா, கோவில்பட்டி சுகாதார அலுவலர் டாக்டர் வித்யா, உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஷ்ராம் உட்பட அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.