கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நீதிமன்ற ஊழியரிடம் பணம் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கோவில்பட்டி நடராஜபுரம் பகுதி தண்டவாளப் பாதையில் நீதிமன்ற ஊழியர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, 3 பேர் கொண்ட கும்பல் அவரது பர்ஸை பறித்துச் சென்றுள்ளனர்.;
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், புது அப்பனேரியைச் சேர்ந்த சேர்மன்சாமி மகன் அரிச்சந்திரன் (வயது 37). திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் உதவியாளராக வேலை பார்த்து வரும் இவர், அனந்தபுரி ரெயிலில் திருநெல்வேலியில் இருந்து கோவில்பட்டிக்கு சென்றார். பின்னர் நடராஜபுரம் பகுதி தண்டவாளப் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, 3 பேர் கொண்ட கும்பல் அவரது பர்ஸை பறித்துச் சென்றனராம். அதில் ஏடிஎம் அட்டை, ஆதார் மற்றும் ரூ.700 இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அரிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.