மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை

கூடங்குளம் மற்றும் நாங்குநேரி AMRL துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-06-08 16:47 IST

திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கூடங்குளம் மற்றும் நாங்குநேரி AMRL துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (10.06.2025, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினம் அந்த உபமின் நிலையங்களில் பின்வரும் நேரங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை:

கூடங்குளம், இடிந்தகரை, இருக்கன்துறை, பொன்னார்குளம், விஜயாபதி, ஆவுடையாள்புரம், தோமையார்புரம், சங்கனேரி, வைராவிகிணறு, தாமஸ் மண்டபம் ஆகிய இடங்களில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை:

நாங்குநேரி, இராஜாக்கள்மங்களம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி, பெருமளஞ்சி கீழ் ஊர், பெருமளஞ்சி மேல் ஊர், ஆச்சியூர், வாகைகுளம், கோவனேரி, AMRL தொழிற்கூடம் ஆகிய இடங்களில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்