தூத்துக்குடியில் கொசுவர்த்தியால் தீ விபத்து: பெண் உயிரிழப்பு

கயத்தாறு அருகே வில்லிசேரி பகுதியில் கணவன், மனைவி, மகள் ஆகியோர் கொசுவர்த்தியைப் பற்றவைத்துவிட்டு, வீட்டுக் கதவைத் திறந்து வைத்து தூங்கியுள்ளனர்.;

Update:2025-08-07 10:45 IST

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே வில்லிசேரியில் உள்ள குமரன் தெருவைச் சேர்ந்த அய்யனார் மகன் செல்வராஜ் (வயது 54), விவசாயி. இவரது மனைவி மாரியம்மாள், மகள் கௌசல்யா. இவர்கள் கடந்த ஜூன் 13ம் தேதி கொசுவர்த்தியைப் பற்றவைத்துவிட்டு, வீட்டுக் கதவைத் திறந்து வைத்து தூங்கியுள்ளனர்.

அப்போது காற்று காரணமாக, கொசுவர்த்தியின் தீப்பொறி அருகேயுள்ள சாக்கில் விழுந்து தீப்பற்றி, மாரியம்மாளின் சேலையிலும் தீப்பிடித்துள்ளது. இதில் அவரும், காப்பாற்ற முயன்ற செல்வராஜூம் காயமடைந்தனர். அவர்களை மீட்டு கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் மாரியம்மாள் தீவிர சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்