ரூ.1.07 கோடியில் பல்நோக்கு மையக் கட்டிடப் பணிகள் - மேயர் பிரியா நேரில் ஆய்வு
மேயர் பிரியா, கட்டிடப் பணியினை விரைந்து முடித்துப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.;
சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
மேயர் ஆர்.பிரியா திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74க்குட்பட்ட ஓட்டேரி, பிரிஸ்லி நகர் மற்றும் பாஷ்யம் தெருவில் ரூ.1.07 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மையக் கட்டிடப் பணியினை இன்று (22.01.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேயர் ஆர்.பிரியா பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74க்குட்பட்ட ஓட்டேரி, பிரிஸ்லி நகர் முதல் தெருவில் மூலதன நிதியில் ரூ.40 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மையக் கட்டடப் பணியினை இன்று (22.01.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஓட்டேரி, பாஷ்யம் 2வது தெருவில் மூலதன நிதியில் ரூ.67 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் 2 பல்நோக்கு மையக் கட்டிடப் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணியினை விரைந்து முடித்துப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின்போது, மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.