மகனை ஜாமீனில் எடுக்க முடியவில்லை: மன வேதனையில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு தம்பதியின் மகன் ஒருவர் கொலை வழக்கில் கைதாகி குண்டர் தடுப்புச் சட்டத்தில் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.;
தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த ஸ்டீபன் மனைவி விமல் ராணி (வயது 43), குரூஸ்புரத்தில் உள்ள அங்கன்வாடியில் தற்காலிக பணி செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் ஒருவர் கொலை வழக்கில் கைதாகி குண்டர் தடுப்புச் சட்டத்தில் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை ஜாமீனில் எடுக்க முடியவில்லையாம். இதனால் மன வேதனை அடைந்த விமல் ராணி நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருளப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.