மாணவர்களின் திறனை மேம்படுத்தவே 'நான் முதல்வன் திட்டம்':முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

எந்த இடர் வந்தாலும் கல்வியை மட்டும் நாம் விட்டு விடக் கூடாது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.;

Update:2025-04-26 10:52 IST

சென்னை,

சென்னையில் நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது;

"மாணவர்களின் திறனை மேம்படுத்தவே நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டது. கல்விதான் நம் ஆயுதம். எந்த இடர் வந்தாலும் கல்வியை மட்டும் நாம் விட்டு விடக் கூடாது. தமிழ்நாட்டிற்கென அறிவு முகம் இருக்கிறது. தமிழ்நாட்டை சேர்ந்த அதிகாரிகளுக்கு தனி மதிப்புள்ளது. எப்படிப்பட்ட போட்டித் தேர்வாக இருந்தாலும் நமது மாணவர்கள் வெற்றிபெறவே நான் முதல்வன் திட்டம் கொண்டுவரப்பட்டது.

அதிகாரம் என்பது சக மனிதர்களுக்கும், சமூகத்திற்கும் உதவுவதாக இருக்க வேண்டும். மக்களின் மனதில் நாம் இடம்பெற வேண்டும். மக்களின் உயர்வுக்காக பாடுபட வேண்டும். கடமையை நிறைவேற்றிய தந்தைக்கு கிடைக்கும் மகிழ்ச்சியை எனக்கு கொடுத்திருக்கிறீர்கள்.

இந்தியாவோட எந்த மூலைக்கு நீங்க பணியாற்ற போனாலும், சமத்துவம், சமூகநீதி, வாய்மை, நேர்மை ஆகியவற்றை மனசுல வெச்சு, ஏழை எளிய மக்களோட உயர்வுக்காகப் பாடுபடுங்கள். உங்களோட சிந்தனையால் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டால், மக்களோட மனதில் ஒரு நிரந்தர இடம் கிடைக்கும்."

இவ்வாறு அவர் பேசினார்.  

Tags:    

மேலும் செய்திகள்