நெல்லை: அடிக்கடி செல்போனில் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை
அடிக்கடி செல்போனில் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
கோப்புப்படம்
திருநெல்வேலி மாவட்டம் உவரி அருகே வெம்மணங்குடியைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் அபிநயா (17 வயது). வள்ளியூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவர் அடிக்கடி செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. எனவே அவரை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அபிநயா செல்போனில் பேசியதாகவும், அவரை பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த அபிநயா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த உவரி போலீசார், அபிநயாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடிக்கடி செல்போனில் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.