நெல்லை: நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு - 2 பேர் கைது

நெல்லையில் சாலையில் நடந்த சென்ற பெண்ணிடம் அந்த வழியாக பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் நகையை பறித்துச் சென்றனர்.;

Update:2025-04-19 18:54 IST

திருநெல்வேலி மாநகர், குலவணிகர்புரத்தைச் சேர்ந்த ஞானசிகாமணி மனைவி மூக்கம்மாள் (வயது 45), நேற்று இரவு பெருமாள்புரம் பகுதியில் உள்ள ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள திருமண மண்டபம் அருகே உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் மூக்கம்மாள் அணிந்திருந்த நகையை பறித்துள்ளனர். இதனால் அவர் கூச்சலிட்டுள்ளார். அப்போது அங்கு நடந்து வந்த மூதாட்டி ஒருவர் அந்த மர்ம நபர்களை தடுக்க முயற்சித்துள்ளார். அப்போது அந்த நபர்கள் கையில் இருந்த நகையும், செல்போனும் கீழே விழுந்துள்ளது.

இதனையடுத்து பெருமாள்புரம் போலீசாருக்கு இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அங்கிருந்த சி.சி.டி.வி. உதவியோடு மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திருநெல்வேலி மாவட்டம், மேல தாழையூத்தைச் சேர்ந்த முகமதுஹனிபா மகன் முகமதுராபிக் (வயது 32), தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தைச் சேர்ந்த வில்லியம் மகன் பிரபு (வயது 29) ஆகிய 2 பேரும் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து பெருமாள்புரம் போலீசார் அவர்கள் 2 பேரையும் சம்பவம் நடந்த 4 மணி நேரத்திற்குள் அன்று இரவே கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்