மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் புதிய காவலர் உணவு விடுதி திறப்பு: எஸ்.பி. விளக்கு ஏற்றினார்

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தின் முன்பு எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் மரக்கன்று நட்டார்.;

Update:2025-06-13 07:27 IST

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி நகர உட்கோட்டம், தெற்கு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நேற்று பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருக்கு பயன்படும் வகையில் மலிவு விலையில் காலை, மதியம் மற்றும் இரவு (மூன்று வேளைகள்) சுவையுடன் கூடிய சைவ மற்றும் அசைவ உணவு விடுதியை நேற்று மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். இந்த உணவு விடுதி பொதுமக்கள் மற்றும் காவலர்களுக்கு பயன்படும் வகையில் திறக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து மாவட்ட ஆயுதப்படை வளாகத்தின் முன்பு எஸ்.பி. மரக்கன்று நட்டார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் சுனைமுருகன், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்