நீலகிரி: வரையாடுகள் கணக்கெடுப்பின்போது மயங்கி விழுந்த வனக்காப்பாளர் உயிரிழப்பு
இந்த பணியின்போது வனக்காப்பாளர் மணிகண்டன் என்பவரும் வரையாடு கணக்கெடுப்பில் ஈடுபட்டார்;
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் வரையாடுகள் கணக்கெடுக்கும்பணி நேற்று தொடங்கியது. இதில், மலை முகடுகள், புல்வெளிகள் மலைகள் மற்றும் நீர் நிலைகள் ஆகிய வரையாடு வாழ்விடங்களுக்கு சென்று அதிகாரிகள் வரையாடுகள் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர்.
இந்த பணியின்போது வனக்காப்பாளர் மணிகண்டன் என்பவரும் வரையாடு கணக்கெடுப்பில் ஈடுபட்டார். வனப்பகுதியில் நேற்று மாலை பணியில் இருந்தபோது மணிகண்டன் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மீட்ட சக ஊழியர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால், அவர் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.