என்.எல்.சி. முற்றுகை போராட்டம்: அன்புமணி ராமதாஸ் மீதான வழக்கு ரத்து

தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அன்புமணி ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.;

Update:2025-04-23 15:03 IST

சென்னை,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கடந்த 2023-ம் ஆண்டு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை போலீசார் கைது செய்தனர். அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அப்பகுதி முழுவதும் பரபரப்புடன் காணப்பட்ட நிலையில், போக்குவரத்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது.

என்எல்சி முற்றுகை போராட்டத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அன்புமணி மற்றும் பாமகவினர் விடுதலை செய்யப்பட்டனர்.

இதனையடுத்து என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிக்கு எதிராக அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைப்பெற்ற போராட்டத்தால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அன்புமணி ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அன்புமணி ராமதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்