திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது; உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் விருதுநகருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.;
துணை முதல்-அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் விருதுநகருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார். இதையடுத்து சாத்தூரில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது,
எத்தனையோ நம்பிக்கை துரோகங்கள், சோதனைகள், எதிரிகளை நாம் சந்தித்துள்ளோம். நாம் சண்டை போடாத ஆட்களே இல்லை. நம்முடன் சண்டை போடும் அளவுக்கு தகுதியானவர்கள் இந்தியாவிலேயே இல்லை. தமிழகத்தை எட்டிக்கூட பார்க்க முடியவில்லையே என்று மத்திய பாஜக அரசு ஏங்குகிறது. திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது. 75 ஆண்டுகள் ஆனாலும் திமுக எழுச்சியுடன் இருக்கும்
இவ்வாறு அவர் கூறினார்.