‘உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை’ - மதுரை ஐகோர்ட்டு கிளை அதிருப்தி
கோர்ட்டு ஏதோ உத்தரவுகளை பிறப்பிக்கிறது என அதிகாரிகள் நினைக்கின்றனர் என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.;
மதுரை,
கரூர் மாவட்டம் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணியசுவாமி கோவில் ஆக்கிரமிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மதுரை ஐகோர்ட்டு கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோவில் சொத்துகளை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம் ஏன்? என கேள்வி எழுப்பினர்.
அதோடு, கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்றம் ஏதோ உத்தரவுகளை பிறப்பிக்கிறது என அதிகாரிகள் நினைக்கின்றனர் என்று குறிப்பிட்டனர். இந்த வழக்கில் கோவில் நில ஆக்கிரமிப்பாளர்களை காப்பாற்ற முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.