மதுரையில் ஆம்னி பஸ்கள் விபத்து: 3 பயணிகள் பலி, 15 பேர் படுகாயம்
விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.;
சென்னை,
சென்னையில் இருந்து நெல்லை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பஸ் மீது மற்றொரு ஆம்னி பஸ் மோதியது. இந்த கோர விபத்தில் 3 பயணிகள் பலியாகினர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். மதுரை கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நின்றிருந்த ஆம்னி பஸ் மீது பின்னால் வந்த ஆம்னி பஸ் அசுர வேகத்தில் மோதியுள்ளது.
இந்த விபத்தில் நின்றிருந்த ஆம்னி பஸ்சின் பின்பக்கம் பலத்த சேதம் அடைந்தது. விபத்தில் சிக்கி அபயக்குரல் எழுப்பிய பயணிகளை அங்கு இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சமீப காலமாக ஆம்னி பஸ்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.