சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி: குடும்பத்தினருக்கு ரூ.33.75 லட்சம் இழப்பீடு- சென்னை கோர்ட்டு தீர்ப்பு
சென்னை கோபாலபுரத்தை சேர்ந்த ஜித்தின் ஜோஸ்வா, தாம்பரத்தில் உள்ள எம்.சி.சி. கல்லூரியில் இளங்கலை சமூகப்பணி பாடப்பரிவில் 3ம் ஆண்டு படித்து வந்தார்.;
சென்னை கோபாலபுரத்தை சேர்ந்த ஜெயக்குமாரின் மகன் ஜித்தின் ஜோஸ்வா (வயது 20), தாம்பரத்தில் உள்ள எம்.சி.சி. கல்லூரியில் இளங்கலை சமூகப்பணி பாடப்பிரிவில் 3ம் ஆண்டு படித்து வந்தார்.
ஜித்தின் ஜோஸ்வா கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ம் தேதி மோட்டார் சைக்கிளில் வேளச்சேரியில் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற கார் திடீரென பிரேக் போட்டதில், காரின் பின்னால் சென்ற அவரது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜித்தின் ஜோஸ்வா உயிரிழந்தார்.
இதுதொடர்பாக உரிய இழப்பீடு கோரி சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, விபத்தில் இறந்த கல்லூரி மாணவரின் குடும்பத்தினருக்கு தனியார் காப்பீட்டு நிறுவனம் ரூ.33 லட்சத்து 75 ஆயிரத்து 600 இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.