எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் தவெகவினர் ஆர்ப்பாட்டம்
சென்னை சிவானந்தா சாலையில் புஸ்சி ஆனந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.;
சென்னை,
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் 16ம் தேதி (இன்று ) ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக தவெக மாவட்ட செயலாளர்கள் முறையாக போலீஸ் அனுமதி பெற்றுள்ளனர். மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டனர்.
இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னையில் சிவானந்தா சாலையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா பங்கேற்றனர். மேலும், அமைப்பு ரீதியாக சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த 13 மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நடக்கிறது. இதே போல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தவெகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்காணவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட, ஒன்றிய, அணி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று த.வெ.க. முன்னதாக அறிவுறுத்தி இருந்தது.