செங்கோட்டையன் வீட்டுக்கு படையெடுத்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
ஒன்று பட்ட அதிமுகவிற்காக குரல் கொடுத்த செங்கோட்டையனுக்கு நன்றி தெரிவித்தனர்.;
கோவை,
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த 5ம் தேதி கொடுத்த குரலுக்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா அணியினர் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து கட்சி பொறுப்புகளில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கும் கே.ஏ.செங்கோட்டையனுக்கும் மோதல் வெளிப்படையானது.
இந்த நிலையில், கோபி அருகே அத்தாணி பகுதியில் இருந்து 200க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குள்ளம்பாளையத்தில் உள்ள முன்னாள் செங்கோட்டையன் வீட்டிற்கு சென்றனர். அப்போது செங்கோட்டையன் வீட்டின் முன்பாக பட்டாசு வெடித்த அவர்கள், ஒன்று பட்ட அதிமுகவிற்காக குரல் கொடுத்த செங்கோட்டையனுக்கு நன்றி தெரிவித்தனர்.