தஞ்சையில் நாளை நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

திருவாரூரிலும் நாளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-10-25 21:43 IST

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் நாளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி 299 அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் 9 தொகுப்பு கிடங்குகள், 23 சேமிப்பு கிடங்குகள் நாளை முதல் செயல்படும் என தஞ்சை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். இதேபோல் திருவாரூரிலும் நாளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கும் என அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Full View
Tags:    

மேலும் செய்திகள்