போப் பிரான்சிஸ் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல்
சட்டசபையில் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்;
சென்னை,
போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, தமிழக அரசு சார்பில் இன்றும், நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு நடைபெறும் நாளன்றும் துக்கம் கடைபிடிக்கப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடியதும் சபாநாயகர் அப்பாவு போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார். அப்போது, முற்போக்கு கொள்கையோடு பெரும்மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமை போப் பிரான்சிஸ் என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, சட்டசபையில் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர், வழக்கமான நிகழ்வுகள் கேள்வி நேரத்துடன் தொடங்கியது.