‘ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸ் கட்சியினரின் ஆசை’ - விஜய் வசந்த் எம்.பி.

வாக்கு திருட்டை ஆதாரப்பூர்வமாக நிரூபித்த பிறகு தேர்தல் ஆணையம் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறது என விஜய் வசந்த் தெரிவித்தார்.;

Update:2025-10-12 05:18 IST

கன்னியாகுமரி,

மத்திய பா.ஜ.க. அரசு வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதைத் தமிழக மக்களிடம் எடுத்துக்கூற நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் அண்ணா பஸ் நிலையத்தில் நேற்று நடந்தது. இதில் விஜய் வசந்த் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

“வாக்கு திருட்டு செய்துதான் பா.ஜ.க. பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். அதை தேர்தல் ஆணையம் மறுத்தது. ஆனால் தற்போது ஆதாரப்பூர்வமாக நிரூபித்த பிறகு தேர்தல் ஆணையம் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறது.

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் கூறியுள்ளதாக கேட்கிறீர்கள். அது அனைத்து காங்கிரஸ்காரர்களின் ஆசையுமாக கூட இருக்கும். தொடர்ந்து வெற்றி கூட்டணியில் இருந்து கொண்டிருக்கிறோம். அதனால் ஆட்சியில் பங்கு வேண்டும், கூடுதல் சீட்டுகள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா காங்கிரஸ்காரர்களும் இருக்கிறது. ஆனால் அனைத்து முடிவும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எடுக்கும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்