நிர்வாக காரணங்களுக்காக தமிழக அரசு அவ்வப்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து வருகின்றது. மேலும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், மாநில அரசில் பணியாற்று வரும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக பணிய வரும் அருண் ராஜ், சர்க்கரை துறை கூடுதல் இயக்குநராக நியமிக்க்ட்ப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் சார் ஆட்சியராக பணியாற்றி வந்த மிருணாளினி, பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.