பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: சென்னையில் தேர்ச்சி எவ்வளவு? - முழு விபரம்

கணினி பயன்பாடுகள் பாடப்பிரிவில் அதிகபட்சமாக 26 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.;

Update:2025-05-08 13:11 IST

கோப்புப்படம் 

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 35 மேல்நிலைப்பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2024-2025ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 2,328 மாணவர்கள் மற்றும் 3,059 மாணவியர் என மொத்தம் 5,387 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினார்கள். இதில் 1,949 மாணவர்கள் (83.70%) மற்றும் 2,798 (91.46%) மாணவியர் என மொத்தம் 4,747 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 88.12% ஆகும். (கடந்த ஆண்டின் தேர்ச்சி விகிதம் 87.13% ஆகும்.)

பாடவாரியான தேர்ச்சி சதவிகிதத்தில் கணினி பயன்பாடுகள் பாடப்பிரிவில் 26, கணினி அறிவியல் பாடப்பிரிவில் 19, கணக்குப் பதிவியல் பாடப்பிரிவில் 3, வேதியியல் பாடப்பிரிவில் 2, பொருளியல் பாடப்பிரிவில் 2, வரலாறு பாடப்பிரிவில் 1, புவியியல் பாடப்பிரிவில் 1 என மொத்தம் 54 மாணவ, மாணவியர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் 65 மாணவ, மாணவியர்கள் 551க்கு மேல் 600 வரை மதிப்பெண்களும், 247 மாணவ. மாணவியர்கள் 501லிருந்து 550 வரை மதிப்பெண்களும், 541 மாணவ, மாணவியர்கள் 451லிருந்து 500 வரை மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் ஐந்து இடங்களில் உள்ள பள்ளிகள் :

புல்லா அவென்யூ சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 591 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், பெரம்பூர், எம்.எச். சாலை-சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 588 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், பெரம்பூர், எம்.எச். சாலை-சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 583 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளன.

தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் முதல் ஐந்து இடங்களில் உள்ள பள்ளிகள்:

நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதத்துடன் முதலிடத்தையும், புலியூர் சென்னை மேல்நிலைப்பள்ளி 98.61 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 97.36 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும், நெசப்பாக்கம் சென்னை மேல்நிலைப்பள்ளி 97.22 சதவீதத்துடன் நான்காம் இடத்தையும், திருவான்மியூர் சென்னை மேல்நிலைப்பள்ளி 95.59 சதவீதத்துடன் ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளன.  

Tags:    

மேலும் செய்திகள்