போக்சோ வழக்கு: அனைத்து குழந்தைகளுக்கும் மருத்துவ பரிசோதனை தேவையில்லை - டி.ஜி.பி. சுற்றறிக்கை

குழந்தை காயமடைந்து இருந்தால், காயத்தின் தன்மையை அறிவதற்கு மட்டும் பரிசோதனை நடத்தலாம் என்று டி.ஜி.பி. தெரிவித்துள்ளார்.;

Update:2025-10-17 13:57 IST

சென்னை,

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களில், கைது செய்யப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இத்தகைய போக்சோ வழக்குகளில், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நிலையில் போக்சோ சட்ட வழக்குகளின்கீழ், பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்த தேவையில்லை என டி.ஜி.பி. சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், பாலியல் வன்கொடுமை தொடர்பான சட்டப்பிரிவுகள் இருந்தால் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யலாம் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், இத்தகைய வழக்குகளில் வன்கொடுமை செய்யப்படாமல் குழந்தை காயமடைந்து இருந்தால், காயத்தின் தன்மையை அறிவதற்கு மட்டும் பரிசோதனை நடத்தலாம் என்று டி.ஜி.பி. தெரிவித்துள்ளார். சாதாரண பாலியல் குற்றத்துக்கு மருத்துவ பரிசோதனை செய்வதால் குழந்தைகள் மனஉளைச்சலுக்கு ஆளாவதால் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்