தூத்துக்குடியில் தூய்மைப்பணியில் போலீசார்: பொதுமக்கள் பாராட்டு
தூத்துக்குடியில் காய்கனி மார்க்கெட் எதிரே உள்ள மாநகராட்சி பம்பிங் ஸ்டேஷன் பின்புறம் உள்ள இடத்தை தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிறுநீர் கழிக்க பயன்படுத்தி வந்தனர்.;
தூத்துக்குடியில் காய்கனி மார்க்கெட் எதிரே உள்ள மாநகராட்சி பம்பிங் ஸ்டேஷன் பின்புறம் மூடை சுமை தொழிலாளர்களும், மற்ற பொதுமக்களும் சரியான கழிப்பிட வசதி இல்லாததால் அந்தப் பகுதியை சிறுநீர் கழிக்க பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதி துர்நாற்றத்துடன் சுகாதாரக்கேடு நிலவியது. மாநகராட்சி சுகாதாரத்துறை சுண்ணாம்பு பவுடரை மட்டும் தூவி வந்தது.
தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து போகும் இந்த இடத்தினை கடந்து செல்பவர்கள் மூக்கைப் பொத்திக் கொண்டு செல்லும் நிலை இருந்தது. இந்த நிலையில் தூத்துக்குடி மாநகர காவல்துறையினர் அந்த இடத்தை சுத்தப்படுத்தும் பணியினை மேற்கொண்டனர். மேலும் அந்த இடத்தினை ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தும் இடமாக மாற்றியுள்ளனர். இந்த தூய்மைப் பணியினை மேற்கொண்ட தூத்துக்குடி டிராபிக் ஆர்.ஐ. வில்லியம்பெஞ்சமின், மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்அய்யர், டிராபிக் எஸ்.ஐ. வெங்கடேசன் ஆகியோரின் முயற்சியை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.