தூத்துக்குடியில் போலீசாரின் கவாத்து பயிற்சி: எஸ்.பி. ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் தூத்துக்குடி நகர உட்கோட்டம் மற்றும் ஆயுதப்படை காவல்துறையினரின் கவாத்து பயிற்சி நடைபெற்றது.;

Update:2025-10-11 17:35 IST

தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலக குறிப்பானையின்படி இன்று அனைத்து உட்கோட்டங்களிலும் காவல்துறையினரின் கவாத்துப் பயிற்சி நடைபெற்றது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் இன்று நடைபெற்ற தூத்துக்குடி நகர உட்கோட்டம் மற்றும் ஆயுதப்படை காவல்துறையினரின் கவாத்து பயிற்சியை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பார்வையிட்டார்.

அப்போது அவர் காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கினார். பின்னர் மேற்சொன்ன காவல்துறையினரின் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன் உட்பட காவல் நிலையங்களைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்