திண்டுக்கல்லில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை

செங்குறிச்சி துணை மின்நிலையத்தில் புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணி நாளை நடைபெறுகிறது.;

Update:2025-04-22 19:44 IST

திண்டுக்கல்,

திண்டுக்கல் தெற்கு மின்வாரிய செயற்பொறியாளர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

திண்டுக்கல்லை அடுத்த செங்குறிச்சி துணை மின்நிலையத்தில் புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணி நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அன்றைய தினம் செங்குறிச்சி மற்றும் செந்துறை துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட ராஜக்காப்பட்டி, சிலுவத்தூர், புகையிலைப்பட்டி, வி.எஸ்.கோட்டை, மார்க்கம்பட்டி, வி.டி.பட்டி, வி.மேட்டுப்பட்டி, தேத்தாம்பட்டி, கம்பிளியம்பட்டி, காட்டுப்பட்டி,

செங்குறிச்சி, எஸ்.குரும்பபட்டி, செந்துறை, மாதவநாயக்கன்பட்டி, பிள்ளையார்நத்தம், கோட்டைப்பட்டி, கோசுக்குறிச்சி, குடகிபட்டி, மங்களபட்டி, மணக்காட்டூர், களத்துப்பட்டி, மாமரத்துப்பட்டி, கருத்தநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்