திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது கர்ப்பிணி உயிரிழப்பு
பிரசவத்தின் போது அதிக ரத்தப்போக்கு காரணமாக கர்ப்பிணி பெண் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதிக ரத்தப்போக்கு காரணமாக குழந்தை பிறந்த சில நிமிடங்களில் தாய் பரிதாபமாக உயிரிழந்தார்,
போதிய டாக்டர்கள், செவிலியர்கள் இல்லாததே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.