எண்ணூர் அனல் மின் நிலைய விபத்தில் இறந்தவர்களுக்கு ராமதாஸ் இரங்கல்

இறந்தவர்கள் குடும்பத்திற்கு அதிகப்படியான நிவாரண நிதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.;

Update:2025-10-01 12:51 IST

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

எண்ணூர் அனல் மின் நிலையத்தில் பெல் நிறுவனம் மேற்கொண்டு வரும் மின் உற்பத்தி நிறுவன கட்டுமானப் பணிகளின் போது நடந்த விபத்தில் 9 அசாம் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறந்தவர்கள் குடும்பத்திற்கு அதிகப்படியான நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் எனவும் அரசை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்