குடியரசு தினம்: தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம்

தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.;

Update:2026-01-26 09:29 IST

சென்னை,

குடியரசு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று (திங்கட்கிழமை) கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மக்கள் திட்டமிடல் இயக்கம், தூய்மையான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்படுகிறது.

மேலும், தொழிலாளர் வரவு- செலவு திட்ட பணிகள், நலிவு நிலை குறைப்பு நிதி, தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், சிறு பாசன ஏரிகள் புதுப்பித்தல் குறித்து விவாதித்தல், தொகுதி மேம்பாட்டுத்திட்டம், ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் அரசின் பிற முக்கிய திட்டங்கள் குறித்த விபரங்கள் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்பட உள்ளது.

எனவே, இந்த கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்