குடியரசு தினம்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

இந்திய மக்களாட்சி வலுப்பெறும் வகையில் செயல்பட இந்நாளில் உறுதியேற்போம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-26 09:30 IST

சென்னை,

நாட்டின் 77-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், குடியரசு தினத்தையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய குடியரசு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு, இந்திய அரசியலமைப்பு அளித்த சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உயரிய கோட்பாடுகளின் அடிப்படையில் நமது இந்திய மக்களாட்சி தொடர்ந்து வலுப்பெறும் வகையில் செயல்பட இந்த நன்னாளில் உறுதியேற்போம்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்