கொடுங்கோல் மன்னர் ஆட்சியை முடித்து என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி மலர்ந்திட உறுதியேற்போம்: நயினார் நாகேந்திரன்
கொடுங்கோல் மன்னர் ஆட்சியை முடித்து என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி மலர்ந்திட உறுதியேற்போம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
இந்தியா சுதந்திர நாடாக தனக்கென தனி இறையாண்மை, கோட்பாடு, அரசியல் சட்டம் ,கொள்கை, அரசியலமைப்பு போன்றவற்றை உருவாக்கி, இந்திய நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, அமலுக்கு கொண்டு வந்த நாள் 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ம் நாள்.
இந்த 77-வது குடியரசு தினத்தில் தமிழகத்தில் நடக்கும் கொடுங்கோல் மன்னர் ஆட்சியை முடித்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்.டி.ஏ.) குடியாட்சி மலர்ந்திட உறுதியேற்று,நாம் அனைவரும் பாடுபடுவோம் வெற்றி பெறுவோம் என தெரிவித்துக்கொண்டு, அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.