தூத்துக்குடியில் போலீசாரை வெட்ட முயன்ற ரவுடி கைது: அரிவாள் பறிமுதல்
தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் ரோந்து பணிக்கு சென்றபோது, மேட்டுப்பட்டி மயானக்கரை பகுதியில் ஒரு ரவுடி அரிவாளுடன் பதுங்கி இருந்துள்ளார்.;
தூத்துக்குடி, லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் சந்தனராஜ்(எ) பேண்டி (வயது 22). இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துராஜா, சுந்தர் மற்றும் போலீசார் கடந்த 11ம் தேதி ரோந்து பணிக்கு சென்றனர்.
அப்போது மேட்டுப்பட்டி மயானக்கரை பகுதியில் சந்தனராஜ் அரிவாளுடன் பதுங்கி இருந்துள்ளார். அவரை மடக்கிப் பிடிக்க முயன்றபோது, போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். அப்போது போலீசார் சுற்றி வளைத்து, அவரை கைது செய்து அரிவாளை பறிமுதல் செய்தனர்.